புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியர் தர்ணா போராட்டம்

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2022-08-11 18:54 GMT


புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று துறை தலைவராக உள்ளவர் காயத்ரி தேவி. இவரது துறையில் 10 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இதில் ஒருவர் 23 மாணவர்களிடமிருந்து தலா ரூ.703 வீதம் கல்லூரி கட்டணம் என்று வசூல் செய்ததாக புகார் எழுந்தது. இந்தநிலையில் பணம் விவகாரம் கையாண்ட கல்லூரியில் பணியாற்றியவர் விடுமுறையில் சென்றதாக கூறப்படுகிறது. முதல்வர் புவனேஸ்வரிக்கு புகார் வந்ததை தொடர்ந்து அவர் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக துறை தலைவர் என்கிற முறையில் காயத்ரி தேவியை அழைத்து விசாரணை செய்துள்ளார். ஆனால் பணம் வசூல் தொடர்பாக தனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பலரிடம் புகார் தெரிவித்தும் பலனளிக்கவில்லை என முதல்வரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் பேராசிரியை காயத்ரி தேவி, கல்லூரி முதல்வர் அறையின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காயத்ரி தேவி கூறியதாவது:- விசாரணை கமிட்டி என்ற பெயரில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எனக்கு மன உளைச்சல் ஆகி உள்ளதாகவும் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதுகுறித்து முதல்வரிடம் கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு 2 கமிட்டிகள் போடப்பட்டுள்ளது. கமிட்டிகள் விசாரணை செய்து அறிக்கை கொடுத்த பின்பு தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்