புதுக்கோட்டை: அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

புதுக்கோட்டை நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர்‌ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-26 05:57 GMT

புதுக்கோட்டை,

அரியலூரை சேர்ந்தவர் தன்ராஜ். இவர் புதுக்கோட்டையில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் இன்று காலை அரியலூரில் உள்ள தன்ராஜின் வீடு , கல்யாண மண்டபம், ஓடக்கார தெருவில் உள்ள இல்லம், பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூரில் உள்ள வீடுகளில் மொத்தம் 6 இடங்களில் 6 குழுக்களாக 40 லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்