புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி திடீரென டெல்லி பயணம்
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவி ஏற்ற பின் முதல் முறையாக திடீரென டெல்லிக்கு சென்றார்.
சென்னை:
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவி ஏற்ற பின் முதல் முறையாக திடீரென டெல்லிக்கு சென்றார். இதற்காக புதுச்சேரியில் இருந்து காரில் வந்த ரங்கசாமி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.