சிறுபாக்கம் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வெளிநடப்பு

சிறுபாக்கம் கிராம சபை கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பொதுமக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-08-15 20:03 GMT

சிறுபாக்கம், 

சிறுபாக்கம் ஊராட்சியில் நேற்று சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார் தலைமை தாங்கினார். மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், ஒன்றிய கவுன்சிலர் பாப்பாத்தி ராமலிங்கம், பொறியாளர் செந்தில்வடிவு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சக்திவேல், வேளாண் அலுவலர் கோவிந்தசாமி, ஊராட்சி செயலர் பாபுதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், கடந்த 3 ஆண்டுகளாக கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செயல்படுத்தப்படவில்லை. கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடு உள்ளது.

இது குறித்து பல முறை புகார் அளித்தும் குடிநீர் மற்றும் சுகாதார சீர்கேடு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்