தரைபாலத்தில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தரைபாலத்தில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி

Update: 2022-06-07 18:18 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வேளாண்மை அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன.

வேளாண்மைத்துறை, மத்திய கூட்டுறவு வங்கி, காவலர் குடியிருப்பு போன்ற அலுவலகங்களும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் ரெயில்வே தரை பாலத்தின் வழியாக தான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் இந்த தரைபாலத்தில் மழைநீர் தேங்கி உள்ளது.

இதனால் இன்று அலுவலக பணிக்காக வந்தவர்கள் பாலத்தின் வழியாக செல்ல முடியாமல் சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி வந்தனர். மேலும் இந்த தரை பாலத்தின் வழியாக சென்ற அரசு அலுவலக கார் ஒன்று அங்கு தேங்கி இருந்த மழைநீரில் சிக்கி கொண்டது.

பின்னர் அந்த காரை தள்ளி வெளியே கொண்டு வந்தனர்.

தரை பாலத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் அரசு அலுவலர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கு மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தரை பாலத்தில் தேங்கி இருந்த மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்