பொதுமக்கள் சாலை மறியல்

நாகூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-14 18:45 GMT

நாகூர்:

நாகூரை அடுத்த சன்னமங்கலம் சேவா பாரதி நகரை சேர்ந்த சுனாமி குடியிருப்பில் 125 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு அங்கன்வாடி இருந்து வந்துள்ளது. இந்த அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்ததால் 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. தற்போது அந்த அங்கன்வாடி இருந்த இடத்தில் மற்ற தெருக்களில் உள்ள 17 பேருக்கு இடம் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த சேவாபாரதி நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் நேற்று இரவு திடீரென்று நாகூர் சின்ன வெட்டாற்று பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன், தாசில்தார் ராஜசேகர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால். நாகூர் - காரைக்கால் சாயைில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்