கோவையில் பொதுமக்கள் போராட்டம்

உயர் அழுத்த மின்கம்பியை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்துகோவையில் பொதுமக்கள் போராட்டம்

Update: 2023-09-20 19:45 GMT

கணபதி

கோவை கணபதி வெங்கடேசபுரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதி வழியாக அண்ணாநகர் பகுதிக்கு உயர்அழுத்த மின்கம்பி மூலம் மின்சாரம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக அங்குள்ள சாலையின் ஓரத்தில் கம்பம் போட குழி தோண்டப்பட் டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கு குழி தோண்டக்கூடாது. புதைவடம் மூலம் உயர்மின் அழுத்த கம்பியை கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கு வேலை செய்வதை விட்டுவிட்டு ஊழியர்கள் சென்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, வீடுகள் நிறைந்த பகுதி வழியாக உயர்அழுத்த மின்கம்பியை கொண்டு செல்லும் போது விபத்து ஏற்படும். இந்த சாலையில் ஆக்கிரமிப்பு உள்ளது. அதை அகற்றி சாலை ஓரத்தில் பாதுகாப்பாக மின்கம்பம் அமைத்து கொண்டு செல்ல வேண்டும். அப்படி செய்தால் எவ்வித பாதிப்பும் இல்லை. இல்லை என்றால் புதைவடம் மூலம் உயர்அழுத்த மின்கம்பிகளை புதைத்து கொண்டு செல்ல வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்