லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

செய்யாறு அருகே லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-28 16:05 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சுமங்கலி கிராமத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கல்குவாரிகளில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் கற்கள் ஏற்றி செல்வதால் விண்ணவாடி வெம்பாக்கம் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மோரணம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறைபிடித்த லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்