உடையார்பாளையம்-செந்துறை சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி உடையார்பாளையம்-செந்துறை சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-02 18:47 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி சி.பி.எஸ். நகரில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் இருபுறமும் பொக்லைன் எந்திரம் மூலம் சாலை தோண்டப்பட்டதால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் உடையார்பாளையம்- செந்துறை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் மற்றும் செந்துறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்