இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-05 20:22 GMT

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி மலைக்கோட்டை சறுக்கு பாறை இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பகுதி கழக, ஒன்றிய கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், இந்தியை திணிக்கும் போது கலைஞர் சொன்னது போல எதிர்ப்போம் என்றார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், இந்தி மொழியை திணித்தால் மொழி சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். இந்தி எதிர்ப்பில் திராவிட இயக்கம் தான் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற கொள்கையில் மத்திய அரசு விரும்புகிறது.

இந்தியை திணித்து விட்டால் எல்லாவற்றையும் திணித்து விடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்