போலீஸ் அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் போலீஸ் அருங்காட்சி யகத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-06 18:45 GMT

பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் போலீஸ் அருங்காட்சி யகத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பராமரிப்பு பணிகள்

இது குறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவை ரெயில் நிலையம் எதிரே தமிழ்நாடு போலீஸ் துறை ஹமில்டன் கிளப்பில் போலீஸ் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

எனவே பொதுமக்கள் பார்வையிட தற்காலிகமாக அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அந்த பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளது.எனவே நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக போலீஸ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு உள்ளது.

திங்கட்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கட்டணம்

அருங்காட்சியகத்தில் உள்ள கருவிகள், அதன் செயல்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 12.30 மணி முதல் 01.30 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 4 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இதற்காக நியமிக்கப் பட்ட வழிகாட்டிகள் உரிய விளக்கம் அளிப்பார்கள்.

பார்வையாளர்களுக்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10 வசூலிக் கப்படும். இதில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் இலவசமாக அனுமதிக்கப்படு வார்கள். அரசு சாரா மற்ற தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒரு நபருக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும்.

நிகழ்ச்சி நடத்தலாம்

போலீஸ் அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை போலீஸ் இசைக்குழு, போலீஸ் நாய் கண்காட்சி நடைபெற உள்ளது.

அங்கு வார நாட்களில் இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்த வெளிப்பகுதியில் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்த வாடகை அடிப்படையில் கொடுக்கப்படும்.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகர போலீஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்