நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி
மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி
குழித்துறை,
மார்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் நடந்து செல்வார்கள்.
ஆனால் இந்த பகுதியில் உள்ள நடை பாதையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கிறார்கள். மேலும் கடைகளில் உள்ள பொருட்களும், பூக்கடைகளும், தற்காலிக கடைகளும் வைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களால் இயல்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாதசாரிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்தவும், பொருட்கள் வைத்திருப்பதை முறைப்படுத்தவும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.