பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-13 18:52 GMT

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் வடக்கு விஜயநாராயணம் துணை சுகாதார மையத்தில் குறைந்தது வாரத்துக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்க டாக்டர் நியமிக்க வேண்டும். வடக்கு விஜயநாராயணம் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை டாக்டர் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று வடக்கு விஜயநாராயணம் வருவாய் அலுவலர் அலுவலகம் அருகே திடீர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். விவசாய சங்க பிரதிநிதி முருகன் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி, பஞ்சாயத்து தலைவர் மாணிக்கத்தாய் சங்கர், வருவாய் ஆய்வாளர் செல்வி ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததை ெதாடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்