பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-17 13:07 GMT

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் ராஜ் தலைமை தாங்கினார். பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பிரேம்ஆனந்த் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் மோகனமூர்த்தி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், சென்னை ஐகோர்ட்டு 4.7.2022 மற்றும் 1.9.2022 அன்று அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். 25.10.2013 அன்று வெளியிட்ட பணி மூப்பு பட்டியல் படி 1200-க்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய பதவி உயர்வினை வழங்க வேண்டும். 700-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

முடிவில் பொது சுகாதார அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் பூசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்