காவல் துறை சார்பில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

தாந்தோணிமலையில் காவல் துறை சார்பில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ஒரே நாளில் 51 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Update: 2023-03-30 18:34 GMT

சிறப்பு முகாம்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் சிறப்பு முகாம் வாரந்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைக்கான சிறப்பு முகாம் தாந்தோணிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமை தாங்கினார். முகாமில் 101 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 51 மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடித்து வைக்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை விபத்துகளை தடுத்தல், விபத்து வாகனங்களை உடனடியாக ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை வழங்குதல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமை தாங்கினார். மாவட்டம், வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்