போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

Update: 2023-07-05 19:15 GMT

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து 14 கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சாராயம், கஞ்சா கடத்தல் தொடர்பாக 8428103040 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிலிப் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்