தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 கோவில்களில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி அதியமான்கோட்டை காலபைரவர், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூன சாமி கோவில், பரவாசுதேவ சாமி கோவில், எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில், பி.அக்ஹாரம் முனியப்பன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், நடுப்பட்டி சிங்காரத் தோப்பு முனீஸ்வரர் கோவில், இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோவில், பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் ஆகிய 10 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் நடந்த பொதுவிருந்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, கவுதம், அறங்காவலர் குழு தலைவர் சேகரன், அறங்காவலர் முருகவேல், நகராட்சி கவுன்சிலர் பாண்டியன், செயல் அலுவலர் ராதாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோட்டை கோவிலில் நடந்த பொது விருந்தில் அறங்காவலர் குழு உறுப்பினர் அன்பழகன், தாசில்தார் ஜெயவர்மன், நகராட்சி கவுன்சிலர்கள் முல்லைவேந்தன், சுருளிராஜன், கோவில் ஆய்வாளர் சங்கர், செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.