பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்

பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.

Update: 2022-08-12 19:44 GMT

அரியலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (சனிக்கிழமை) கீழ்கண்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அரியலூர் வட்டாரத்திற்கு விழுப்பனங்குறிச்சியிலும், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு எரவாங்குடியிலும், செந்துறை வட்டாரத்திற்கு பொன்பரப்பியிலும், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு ராங்கியிலும் நடக்கிறது. இந்த கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு ரேஷன் அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்.

இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்