பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

முக்கரும்பூர் ஊராட்சியில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது

Update: 2023-07-08 18:45 GMT

திருக்கடையூர்:

முக்கரும்பூர் ஊராட்சியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் அங்கன்வாடி கட்டிடத்தில் நடந்தது. முகாமுக்கு தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் முக்கரும்பூர், பண்டாரவடை, தென்பாதி, கண்டியன் உக்கடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனுக்களை வழங்கினர். முகாமில் 40-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ், வருவாய் துறை ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்