பொதுமக்கள் தர்ணா

பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-25 20:12 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ். கல்லுப்பட்டி கிராமத்துக்கு சொந்தமான கண்மாய் பகுதி மற்றும் கிராம காவல் தெய்வமான வாழ வந்தம்மன், அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு வண்டிப்பாதை இருந்ததாகவும் இந்த பாதை ஒரு சிலரின் பட்டா இடமாக இருப்பதால் தற்போது பொதுமக்கள் கண்மாய் மற்றும் கோவிலுக்கு செல்வதற்கு முடியவில்லை. இதனால் 40 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் செய்தனர். அதன் பிறகு காரியாபட்டி தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் வருகிற 29-ந் தேதி இதுசம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்து பேசி நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்