பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-06-28 18:45 GMT

திருவாரூர் புலிவலம் ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக சமத்துவம் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், புலிவலம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும். மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சேதமடைந்த தொகுப்பு வீடுகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய வீடுகள் வழங்கவேண்டும். பெரிய பள்ளிவாசல் பின்புறம் உள்ள வாய்க்காலை தூர்வார வேண்டும். வடக்கு தெருவிற்கு செல்லும் பாசன வாய்க்காலை உடனே தூர்வார வேண்டும். வில்வனம்படுகை சுடுகாட்டுக்கு செல்லும் பாதை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்