பொதுமக்கள் கோரிக்கை

நாகையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-21 18:45 GMT

தான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அதுவும் முன்னறிவிப்பின்றி கொடுப்பதால் அந்த தண்ணீரையும் பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. குறிப்பாக வீட்டை விட்டு வேலைக்கு செல்பவர்களால் தண்ணீரை பிடித்து வைக்க முடியவில்லை. ஒருமுறை தவறிவிட்டால் ஒரு வாரத்துக்கு பின்பு தான் மீண்டும் தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். இநாகையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு

நாகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர்வசதி, தெருவிளக்கு, பொது சுகாதார பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு பிறகு தான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே குடிநீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

நாகை நகர் பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறை தனால் அதிக விலை கொடுத்து தனியாரிடம் தண்ணீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்த வேண்டி உள்ளது. எவ்வளவு நாள் தான் காசு கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்த முடியும்.

நீர் ஆதாரத்தை ெபருக்கும் திட்டங்கள்

சட்டவிரோதமாக அதிக திறன் கொண்ட மோட்டாரை வைத்து தண்ணீர் பிடிப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும். நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது வீணாக தண்ணீர் கடலில் கலக்கிறது. இதனை சேமித்தால் கோடை காலம் மற்றும் பருவநிலை மாற்ற காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்கலாம். எனவே அரசுக்கு சொந்தமான கோவில் நிலங்களில் செயற்கை ஏரி, குட்டைகளை அமைத்து மழைக்காலங்களில் கடலில் கலக்கும் தண்ணீரை தேக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தீவிர படுத்த வேண்டும். இதன் மூலம் நீர் ஆதாரம் பெருகும். நகரில் தட்டுப்பாடு இன்றி குடிநீரை வினியோகிக்கலாம் என்றனர்.

லாரி மூலம் தண்ணீர் வினியோகம்

இது குறித்து நாகை நகராட்சி ஆணையர் திருமால் செல்வம் கூறுகையில்:-

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு பற்றாக்குறையாக உள்ளது. இதனால் நகராட்சியின் சொந்த குடிநீர் ஆதாரமான ஓடாச்சேரி தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து பெறப்பட்டு வரும் குடிநீர் மட்டும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உயர் மின் அழுத்தத்தினால் குடிநீர் வினியோகிக்கும் மோட்டார்கள் பழுதானது. இதனை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து வருகிறோம். இதனால் குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளிலும், மேடான மற்றும் நீர் அழுத்தம் குறைவாக உள்ள பகுதி பகுதியிலும் தற்சமயம் நகராட்சிக்கு சொந்தமான 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி மூலம் உடனுக்குடன் தண்ணீர் வினியோகித்து வருகிறோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்