பொதுப்பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மனு அனுப்பலாம்
பொதுப்பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மனு அனுப்பலாம்
சட்டப்பேரவை மனுக்கள் குழுவிற்கு பொதுப்பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மனு அனுப்பலாம் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இகுதுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பேரவை மனுக்கள் குழு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-24-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் கூடுவது என்று முடிவு செய்துள்ளது. இதனையொட்டி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்சினைகள், குறைகள் குறித்து மனுக்களை மனுதாரர் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை-600009 என்ற முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பலாம்.
பொதுப்பிரச்சினைகள்
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரே ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரேஒரு துறையை சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
தனிநபர் குறை, கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள், வங்கிக்கடன், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கொண்டதாக இருக்க கூடாது.
உண்ைம நிலவரம்
மனுக்கள் குழு மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வரும்போது மனுக்களை எடுத்துக்கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனுவை மட்டுமே ஆய்விற்கு எடுத்து கொள்ளப்படும்.
மனுதாரர் முன்னிலையில் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டு அறியப்படும். இதுகுறித்து மனுதாரர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 20-ந் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்து கொள்ளப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.