தங்க பத்திர திட்டத்தில் பொதுமக்கள் முதலீடு செய்து பயன்பெறலாம்

தங்க பத்திர திட்டத்தில் பொதுமக்கள் முதலீடு செய்து பயன்பெறலாம் என நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-20 17:47 GMT

வெளிப்பாளையம், ஆக.21 -

நாகை அஞ்சல கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-இந்திய ரிசர்வ் வங்கியின், தங்க பத்திர முதலீட்டுதிட்டம் நாளை(திங்கட்கிழமை) முதல் 26-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை வெளியிட்டுள்ளது.இந்த திட்டத்தின் படி தங்கத்தினை ஒவ்வொரு யூனிட்களில் வாங்கிக் கொள்ளலாம். ஒருயூனிட் என்பது 24 காரட் தங்கத்தின் ஒரு கிராமுக்கு சமம் ஆகும். தற்சமயம் ஒரு யூனிட்டின் மதிப்பு ரூ.5 ஆயிரத்து 197 ஆகும். மேற்படி தங்க பத்திர முதலீட்டு திட்டமானது நாகை கோட்டத்தில், நாகை, திருவாரூர், காரைக்கால் தலைமை அஞ்சலகம் ஆகிய முக்கிய அனைத்து அஞ்சலகங்களிலும் நாளை முதல் 26-ந்தேதி வரை விற்பனை செய்யப்படும்.தங்கத்தினை பத்திரமாக வாங்குவதால் பாதுகாப்பு பற்றிய பயமும், தங்கத்தின் தரத்தினை பற்றிய பயமும், ஏனைய இதர செலவுகள் (செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி) இல்லை. பொதுமக்கள் செய்யும் முதலீடுகளுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியும் ரிசர்வ் வங்கியினால் வழங்கப்படும்.கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகமான லாபம் தரக்கூடிய திட்டமாக இந்த தங்க பத்திர முதலீடு உள்ளதால் பொதுமக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்