பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
அரக்கோணம்
அரக்கோணம் நகராட்சி ஆணையர் லதா தலைமையில் அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முன்னதாக பொது மக்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் தூய்மைக்கான உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து அசோக் நகர் குடிநீர் ஏற்றும் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவும், ஏ.என்.கன்டிகை பகுதியில் மழைநீர் கால்வாய் தூய்மை பணியும் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம், சுகாதார அலுவலர் மோகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.