நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-27 18:45 GMT

தமிழ்நாடு நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன் தலைமையில், அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாதுஎன்ற கோரிக்கையை வலியுறுத்திஇந்த போராட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு மூடப்பட்டது. சமீபகாலமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மக்கள் அனைவரும் வேலை இல்லாமல் திண்டாடுவது போன்றும், தூத்துக்குடியின் பொருளாதாரம் சரிந்து விட்டது போலவும் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை இல்லாததால் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறுவது உண்மை அல்ல. ஆகையால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் போராட்டம் நடத்த தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்