அரசு வீடுகள் கட்டும் பணியை முழுமையாக முடிக்காவிட்டால் போராட்டம்

சேதுபாவாசத்திரம் அருகே அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ள அரசு வீடுகள் கட்டும் பணியை முழுமையாக முடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என விவசாய தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது

Update: 2023-07-10 20:55 GMT

சேதுபாவாசத்திரம்:

சேதுபாவாசத்திரம் அருகே அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ள அரசு வீடுகள் கட்டும் பணியை முழுமையாக முடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என விவசாய தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கூட்டம்

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ராவுத்தன் வயல் ஊராட்சி, மறவன்வயல் பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடந்தது.வி.தொ.ச மாவட்டச் செயலாளர் வாசு, நிர்வாகிகள் வேலுச்சாமி, கருப்பையா, செந்தில்குமார், இளங்கோவன் ஆகியோர் பேசினர். இந்த ்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மறவன்வயல் பகுதியில் பொதுமக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும். அரசு வீடு கட்டித்தர வேண்டும். மறவன்வயல் பகுதியில் குடிநீர் வசதி, பெண்களுக்கு கழிவறை வசதி செய்து தர வேண்டும். பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும். தூய்மைக் காவலர்கள் மூலம் குப்பைகளை அகற்ற வேண்டும்.

30 வீடுகளுக்கு மின் இணைப்பு

இப்பகுதியில் 30 வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் அரைகுறையாக கட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக இந்த வீடுகளை கட்டித் தர வேண்டும். இப்பகுதியில் சாலை அமைத்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போராட்டம் நடத்தப்படும்

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்