தலைகீழாக நின்று பயணிகள் சங்கத்தினர் போராட்டம்
கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி மயிலாடுதுறையில் தலைகீழாக நின்று பயணிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி மயிலாடுதுறையில் தலைகீழாக நின்று பயணிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவல்
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் ரெயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில்வே துறை மிகப்பெரிய வருவாய் இழப்பை சந்தித்தது. இதன்பின் நோய் தொற்று குறைந்ததால் ரெயில் சேவை தொடங்கியது. ஆனால் கொரோனாவுக்கு முன்பு இயங்கியதை போல நாடு முழுவதும் அனைத்து ரெயில்களும் இயக்கப்படவில்லை.
இதனால் அந்த ரெயில்களை நம்பி இருந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். எனவே கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீ்ண்டும் இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனா்
தலைகீழாக நின்று போராட்டம்
இந்தநிலையில் மயிலாடுதுறை ெரயில் நிலையம் முன்பு 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ெரயில் பயணிகள் சங்கத்தினர் தலைகீழாக நின்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ெரயில் பயணிகள் சங்க செயலாளர் சாமி கணேசன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் மகாலிங்கம், ஒருங்கிணைப்பாளர் தமிழன் கணேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
10 ஆண்டுகளாக இணைக்கப்படாத திருவாரூர் அகல ெரயில் பாதையை மயிலாடுதுறை ெரயில் நிலையத்தின் அனைத்து வழித்தடத்தோடும் இணைக்க வேண்டும். மயிலாடுதுறை- திருச்சி விரைவு ெரயிலை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும்.
நெல்லை வரை....
மயிலாடுதுறை-நெல்லை பாசஞ்சர் ெரயிலை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கும் முடிவை கைவிட்டு, நெல்லை வரை இயக்க வேண்டும். காரைக்காலில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக பெங்களூரு செல்லும் பாசஞ்சர் ெரயிலை மீண்டும் உடனே இயக்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வேலுகுணவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் அதிகம் கூடும் மயிலாடுதுறை ரெயில் நிலையம் முன்பு பயணிகள் சங்கத்தினர் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.