மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-02 18:45 GMT

கள்ளக்குறிச்சி

திருமண மண்டபம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்களில் மதுபானம் அருந்தலாம் என்று அனுமதி அளித்த தமிழக அரசை கண்டித்தும், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் கள்ளக்குறிச்சியில் உள்ள கச்சேரி சாலையில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச் செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் குமார், மகளிரணி செயலாளர் நாகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நிறுவனர் செல்வராஜ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாநில தலைவர் ஜெயபிரகாஷ், மாநில பொதுச் செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் சதீஷ்குமார், ரமேஷ், பன்னீர்செல்வம், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்