ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில், ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசும் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.