இந்தியன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
இந்தியன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தியன் வங்கிகளில் வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை அறிமுகப்படுத்த வேண்டும். ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகப்படுத்த வேண்டும். வங்கிகளில் போதுமான அளவிற்கு பணியமர்த்தலை ஏற்படுத்த கோரியும், 12-வது இருதரப்பு ஊதிய பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வலியுறுத்தி இந்தியன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் புதுக்கோட்டை தெற்கு 4-ம் வீதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க உதவி செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிவானந்தம், அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மணிசங்கர் நன்றி கூறினார்.