கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து போராட்டம்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

Update: 2022-07-07 19:59 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் அடியார் குலம்தென்கரையில் கியாஸ் சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் ஒப்பாரி வைத்து அழுது, கியாஸ் சிலிண்டரை சுடுகாட்டிற்கு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய தலைவர் அமுதா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நாகூர் அம்மாள் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சுசீலா, மாவட்ட செயலாளர் சலோமி, மாவட்ட பொருளாளர் பாண்டிச்செல்வி உள்பட பல பெண்கள் கலந்து கொண்டு, ஒப்பாரி வைத்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்