பாலவாக்கத்தில் தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டம்

பாலவாக்கத்தில் தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.;

Update: 2022-06-16 02:47 GMT

சென்னையை அடுத்த பாலவாக்கம் எம்.ஜி.ஆர். சாலையில் கடந்த 20 ஆண்டுகளாக உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து தென் சென்னை கோட்டாட்சியர் சாய்வர்தனி, பெருங்குடி மண்டல உதவி கமிஷனர் முரளி உட்பட மாநகராட்சி மற்றும் வருவாய் துறையினர் பொக்லைன் எந்திரம் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அப்போது தேவாலயத்தில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள், தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என கூறிய அதிகாரிகள், தேவாலயத்தின் சுற்றுச் சுவரை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். உடனே அங்கிருந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் தேவாலயத்துக்கு முன்பு ஒன்று திரண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேவாலய நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் தேவாலயத்தை அகற்ற 3 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்