உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-11-26 13:42 GMT

திருப்பத்தூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.

குரிசல். மணி தலைமை தாங்கினார். செந்தமிழ் முருகன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், ம.தி.மு.க. நகர செயலாளர் இளங்கோவன், த.மு.மு.க. சனாவுல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர துணைச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் உள்பட பலர் பேசினார்கள். இதில் கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் உதயகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்