கம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-23 21:00 GMT

கம்பம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கம்பம் வ.உ.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கம்பம் நகர குழு உறுப்பினர் அய்யப்பன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் லெனின், மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பம் அருகே சுருளி அருவியில் கடந்த 14-ந்தேதி குளித்துவிட்டு வனப்பகுதியில் வந்தபோது, சென்னை நீலாங்கரையை சேர்ந்த நிக்சன் மகள் பெமினா (வயது 15) மீது மரக்கிளை விழுந்தது. இதில், அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படவில்லை. அதேபோல் நிவாரண தொகையும் வழங்கப்படவில்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் சுருளி அருவியில் பராமரிப்பு என்ற பெயரில் கட்டண வசூல் செய்யும் வனத்துறையை கண்டித்தும், கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும், சிறுமி பெமினாவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்