தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பா.ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் தமிழக அரசை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது சாராயம் குடித்து 23 பேர் இறந்த சம்பவத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளை உடனே மூட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. அரசு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பார்வையாளர் முனிராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், சரவணன், மாவட்ட பொருளாளர் வக்கீல் காவேரிவர்மன், ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.