ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். காலிப்பணிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.