தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும். 10-ஆண்டுகள் பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மதியம் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.