நல்லம்பள்ளியில்கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-30 19:00 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் கோவிந்தராசு தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பயணப்படி ரூ.2,000 என உயர்த்தி வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு காலதாமதம் இன்றி பணி வரன்முறை செய்ய வேண்டும். பேரிடர் மேலாண் பணிகளை மேற்கொள்ளும் போது வருவாய் துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வட்ட செயலாளர் சிவசுப்பிரமணி, வட்ட பொருளாளர் சண்முகம், மாவட்ட அமைப்பு செயலாளர் முனுசாமி, துணைத்தலைவர் ராமசுந்தரம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொறுப்பாளர் முனுசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்