தர்மபுரி:
தமிழக கவர்னரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிசுபாலன், அருச்சுணன், மாரிமுத்து, கிரைஸாமேரி, மல்லிகா, சின்னசாமி, ரவி, நகர செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்டோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. காரல் மார்க்ஸ் குறித்தும், மார்க்சிய கொள்கைகள் குறித்தும் அவதூறாக தெரிவித்த கருத்துக்களை தமிழ்நாடு கவர்னர் ரவி உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.