தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-08 19:30 GMT

இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கருவேல்நாயக்கன்பட்டியில் கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் மற்றும் கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், "கருவேல்நாயக்கன்பட்டியில் பட்டாளம்மன், காளியம்மன், கருப்பசாமி கோவிலை மக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு இந்த கோவிலை சிலர் இடித்தனர். அதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீண்டும் கோவிலை புதுப்பித்து வழிபாடு நடத்தி வந்தோம். இந்தநிலையில் மீண்டும் அந்த கோவிலை சிலர் இடித்து சேதப்படுத்தினர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்