மத்திய அரசு உயர்த்தி வழங்கும் அகவிலைப்படியை தொடர்ந்து 3-வது தவணையாக 6 மாத காலம் காலதாமதமாக வழங்கும் நடைமுறையை கைவிட்டு அனைத்து நிலுவை தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் போது கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேரலாதன், மாவட்ட பொருளாளர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுநாதன் நன்றி கூறினார்.