எச்.ஈச்சம்பாடியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

எச்.ஈச்சம்பாடியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-10-19 18:45 GMT

அரூர்:

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் அரூர் ஒன்றியம் எச்.ஈச்சம்பாடி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தீர்த்தகிரி, அரூர் கூட்டுறவு கரும்பு ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் சண்முகம், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் நேரு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பால் கொள்முதல் விலையை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு ரூ.42 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் வழங்க வேண்டும். ஆவின் பாலை 1 லிட்டருக்கு ரூ.3 வீதம் விலையை குறைத்ததால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மாநில அரசு ரூ.300 கோடியை ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பால் பவுடர் சேர்த்து வழங்க வேண்டும். தீபாவளிக்கு முன்பாக பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பால் உற்பத்தியாளர்கள் பால்கேன், கறவை மாடுகளுடன் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்