போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் கிராமம் ரெயில்வே கேட் பகுதியில் நடைபெறும் சாராய விற்பனையை தடுக்காத போலீசாரை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆனந்த தாண்டவபுரம் கடைவீதியில் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.