மத்திகிரி:
ஓசூரை அடுத்துள்ள மத்திகிரி பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திகிரி பகுதியில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். வாலிபர்கள் போதைக்கு அடிமையாகி வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் (பொறுப்பு) ஜி.கே.நஞ்சுண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், இருதயராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சுரேஷ், பிரகாஷ், மகாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் ராஜா ரெட்டி முனியப்பா, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.