விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது பா.ஜனதா பொய் வழக்கு போடுவதாக கூறி, விருத்தாசலத்தில் தபால் நிலையம் முன்பு கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பா.ஜ.க.அரசு பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், விலை வாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் ராஜன், நகரத்தலைவர் ரஞ்சித் குமார், மாநில செயலாளர் அன்பரசு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட செயலாளர்கள் ராஜா, லெனின் குமார், மகளிரணி தலைவர் ஹேமலதா, வேல்முருகன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.