அடிப்படை உரிமையாக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் வீடு, வீட்டுமனை உரிமையை அடிப்படை உரிமையாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-06-06 17:10 GMT

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சி இடது தொழிற்சங்க மய்யம் சார்பில் வீடு, வீட்டுமனை உரிமையை அடிப்படை உரிமையாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செல்லதுரை தலைமை தாங்கினார்.மாநில தலைவர் கோவிந்தராஜ், உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர் மகாலிங்கம், இடது தொழிற்சங்க மைய மாவட்ட அமைப்பாளர் வீரசெல்வன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அனைவருக்கும் வீடு மற்றும் வீட்டுமனை உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை ஆண்டு முழுவதும் வழங்கவேண்டும். 100 நாள் வேலையை நகர பகுதியிலும் அமல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனித்தனியாக கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை உதவி கலெக்டரிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்