நாமக்கல்லில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-28 18:07 GMT

நாமக்கல்:

சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் பவுண்டேஷன் மூலம் வழங்கப்படும் திருமண உதவி நிதி ரூ.2 லட்சம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கமணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்