பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை

குறைதீர்வு நாள்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடநுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-02-06 18:01 GMT

குறைதீர்வுநாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி. வேலைவாய்ப்பு வேண்டி 330 மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.

உடனுக்குடன் நடவடிக்கை

அப்போது திங்கட்கிழமை நடைபெறும் மக்கள்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். கோரிக்கை மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து அனுப்பப்படும் பதில் முறையான விளக்கத்துடன் இருக்க வேண்டும். பொதுமக்களை அலைக்கழிக்கும் வகையில் மனுக்களுக்கு பதில் அளித்தால் சம்பந்தப்பட்ட அலுவலகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே துறை சார்ந்த அலுவலர்கள் திங்கட்கிழமை பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் மீது தனி கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கையும், பதில்களையும் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபானைமையினர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையாளர் சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்