கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.10 லட்சத்தில் திட்டப்பணி தொடக்கம்

கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.10 லட்சத்தில் திட்டப்பணி தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2023-01-19 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சியில், 15-வது நிதிக்குழு மானிய நிதி திட்டம்-2021-22, டைய்டு மானியம் இரண்டாவது தவணை திட்டத்தின் கீழ் கீழப்பாவூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் வாகன நிறுத்த ஷெட் ரூ.10 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்.அறிவழகன், முன்னாள் துணைத்தலைவர் தங்கச்சாமி, காங்கிரஸ் நிர்வாகி பொன் கணேசன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்